திருவாரூர் தமிழ்ச்சங்க முன்னாள் செயலர் பிறந்தநாள் விழா
By DIN | Published On : 14th June 2019 07:37 AM | Last Updated : 14th June 2019 07:37 AM | அ+அ அ- |

திருவாரூர் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலரும், நல்லாசிரியர் விருது பெற்றவருமான மறைந்த சி. செல்வதுரையின் 77-ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு குடவாசல் எம்ஜிஆர் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அ. ஜான்பீட்டர் பங்கேற்று, செல்வதுரையின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தி பேசினார்.
இதில், தமிழ்ச் சங்க துணைத் தலைவர் சக்திசெல்வகணபதி, துணைச் செயலர் இரா. அறிவழகன், இணைச் செயலர் அறிவு, தமிழ் ஆர்வலர்கள் தமிழ்குடில் இளங்கோ, ராவணன், இரா. ஆனந்த், வீ. தர்மதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.