திருவாரூர்-காரைக்குடி ரயில் சேவை: 3 பெட்டிகளுடன் தினசரி இயக்கத் திட்டம்

திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில், 3 பெட்டிகளுடன் தினசரி ரயில் சேவை ஓரிரு நாள்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில், 3 பெட்டிகளுடன் தினசரி ரயில் சேவை ஓரிரு நாள்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில், அகலப் பாதைப் பணிகள் அண்மையில் முடிவடைந்தன. இதையடுத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, பின்னர் டெமு ரயில் சேவையானது ஜூன் 1 முதல் தொடங்கியது. டெமு ரயில் என்பது, (ஈண்ங்ள்ங்ப் உப்ங்ஸ்ரீற்ழ்ண்ஸ்ரீ ஙன்ப்ற்ண்ல்ப்ங் மய்ண்ற்) புறநகர் பகுதிகளில் தென்னக ரயில்வேயால் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, ரயில் பெட்டியுடன் இணைந்து என்ஜின் காணப்படுவதோடு, ரயிலின் இரு முனைகளிலும் இணைந்து என்ஜின் இருக்கும். ரயிலின் இரு புறங்களிலும் என்ஜின் இருப்பதால், மறுமார்க்கத்திலிருந்து ரயில் புறப்படும்போது, ரயிலிலிருந்து என்ஜினை கழட்டி மாட்ட வேண்டிய வேண்டிய அவசியம் இருக்காது.  
திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்திலும் 6 பெட்டிகளுடன் டெமு ரயில் இயங்கி வருகிறது. கேட் கீப்பர்கள் இல்லாததால், மொபைல் கேட் கீப்பர்கள் மூலம் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், திருவாரூரிலிருந்து காரைக்குடி செல்வதற்கு 7 மணி நேரத்துக்கும் மேலாக எடுத்துக் கொள்ளப்படுவதால், ரயில் சேவையானது 3 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருவாரூரிலிருந்து காரைக்குடிக்குச் செல்லும் ரயிலானது, அங்கிருந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில்  காரைக்குடியிலிருந்து திருவாரூருக்கு வருகிறது. 
எனினும், இந்த ரயில் சேவை மக்களுக்கு கொஞ்சமும் பயனளிக்கவில்லை என புகார் தெரிவித்த பயணிகள், இதனால் ரயில்வேவுக்கும் எவ்வித வருமானம் வராது எனவும் கருத்து தெரிவித்திருந்தனர்.  
இந்நிலையில், திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் 6 பெட்டிகளுடன் செல்லும் டெமு ரயிலை, தலா 3 பெட்டிகளுடன் இயக்குவது என ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, 3 பெட்டிகளுடன் திருவாரூரிலிருந்து காலையில் ரயில் புறப்படும்போது, காரைக்குடியிலிருந்து 3 பெட்டிகளுடன் ரயில் புறப்படும். இரண்டும், பட்டுக்கோட்டையில் சந்தித்துக் கொண்டபின், தங்கள் நிலையங்களுக்குச் செல்லும். பின்னர் மறுநாள், இதேபோல் திருவாரூர் மற்றும் காரைக்குடியிலிருந்து ரயில் சேவை நடைபெறும். இதன்மூலம் தினசரி ரயில் சேவையை, இரு மார்க்கத்திலும் வழங்க முடியும் என்பதால், ஓரிரு நாள்களில் இந்த முறையில் ரயில் சேவை நடைபெற உள்ளதாக ரயில்வே வட்டாரத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com