நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்டிக் கொடுக்க மனு

மன்னார்குடி அருகேயுள்ள கர்ணாவூரில் பழுதடைந்த கட்டடத்தில் செயல்பட்டு வரும் நியாவிலைக் கடைக்கு

மன்னார்குடி அருகேயுள்ள கர்ணாவூரில் பழுதடைந்த கட்டடத்தில் செயல்பட்டு வரும் நியாவிலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டும். கடையை வேறு ஊருக்கு மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கர்ணாவூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எஸ். பாப்பையன் தலைமையில் வந்து, ஊராட்சி ஆணையர் கலைச்செல்வத்திடம் அளித்த கோரிக்கை மனு அளித்தனர். அதன் விவரம்: மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கர்ணாவூர் ஊராட்சி பகுதியான கர்ணாவூர், தருசுவேலி.சோத்தரியம், ஆலாச்சேரி, வேட்டைத்திடல் ஆகிய கிராமங்களில் வசிக்கும் குடும்ப அட்டைத்தார்களுக்கான, நியாவிலைக் கடை  கருணாவூரில் செயல்பட்டு வருகிறது. 
இக்கட்டடம் கட்டி நீண்ட காலமாவதால் கட்டடம் பழுதடைந்திருப்பதுடன் மழைக் காலங்களில மழை நீர்க் கசிவு ஏற்பட்டு அத்தியாவசியப் பொருள்கள் சேதமடைந்து வந்ததையடுத்து, கடந்த ஐந்து ஆண்டுக்கு முன் கிராம மக்களின் சார்பில் ரூ. 10 ஆயிரம் நிதி திரட்டப்பட்டு, நியாவிலைக் கடை கட்டடம் பழுது பார்க்கப்பட்டது. 
இநிலையில், மீண்டும் கட்டடம் பழுதடைந்து வருவதுடன், சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, பழுதடைந்த கட்டடத்துக்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், மன்னார்குடி வட்ட வழங்கல் அலுவலர் நேரில் வந்து  கட்டடத்தை பார்வையிட்டு நியாய விலைக்கடையை  வேறு இடத்துக்கு மாற்ற இருப்பதாக
தெரிவித்துள்ளார்.
எனவே, பழுதடைந்துள்ள நியாவிலைக் கடைக்கு பதிலாக கர்ணாவூரிலே புதியக் கட்டடம் உடனடியாக கட்டிக் கொடுக்க வேண்டும். வேறு எந்த ஊருக்கும் நியாய விலைக் கடையை மாற்றம் செய்யக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனு கொடுக்கும்போது, ஊர் முக்கியஸ்தர்கள் எஸ். மாரியப்பன், மருதையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com