ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் முப்பெரும் விழா
By DIN | Published On : 23rd June 2019 01:47 AM | Last Updated : 23rd June 2019 01:47 AM | அ+அ அ- |

திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சார்பில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பரத நாட்டிய சாதனையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, ஆனந்த யோகா தியான பயிற்சி தொடக்க விழா, சர்வதேச உலக யோகா தினம் என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவர் ஜெ. கனகராஜன் வரவேற்றார். ஸ்ரீ நாராயணி நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ். கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் கெüரவத் தலைவர் ஆர். ஸ்ரீதரன், வேலுடையார் கல்விக் குழுமத் தாளாளர் கே.எஸ்.எஸ். தியாகபாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக பேராசிரியர் பி.எஸ். பிரசாத், டிவைன் பைன் ஆர்ட்ஸ் நிர்வாகி கிருத்திகாதேவி ஆகியோர் பங்கேற்று, பரதநாட்டிய சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் காமாட்சிபுரி ஆதீனம் பங்கேற்று, விருதுகளை வழங்கி ஆசி வழங்கினார்.
முன்னதாக, ஆனந்த யோகா சிறப்பு அறிமுகப் பயிற்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஏராளமானோர்பங்கேற்றனர்.