தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யநிலத்தடி நீர் சேமிப்பு மிக அவசியம்: ஆட்சியர் அறிவுறுத்தல்

அதிகரித்துவரும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அனைவரும் நிலத்தடி நீரை சேமிக்க முன்வர வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்தார்.


அதிகரித்துவரும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அனைவரும் நிலத்தடி நீரை சேமிக்க முன்வர வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்தார்.
திருவாரூர் அருகே தண்டலை ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற மழை நீர் சேகரித்தல் மற்றும் நீர் மேலாண்மை குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது:
தண்ணீர் என்பது மிகவும் இன்றியமையாதது. ஆகையால், பொதுமக்கள் நிலத்தடி நீரை சேமிக்க முன்வர வேண்டும். அன்றாட நடைமுறை வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். அதோடு மட்டுமின்றி நாம் பயன்படுத்தும் நீரை மறுசுழற்சிக்குள்படுத்த வேண்டும். 
 இம்மாவட்டத்தில் தண்ணீர்  தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் நிலத்தடி நீரை சேமிக்க அனைவரும் முன்வர வேண்டும். 
மழை பொழியும் காலங்களில் அதை சேகரிப்பதன் மூலம் மழை இல்லாத காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும். எனவே, மழை பொழியும் போது மழை நீரை வீணாக்காமல் ஓர் இடத்தில் சேகரிப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். 
தமிழக அரசு மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. மழைநீர் சேகரிப்பு பற்றிய விளக்கங்கள் அளித்ததுடன் கட்டமைப்புகளை அமைக்க வேண்டியதை கட்டாயப்படுத்தி, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இத்திட்டத்தை அனைவரும் பின்பற்றி மழைநீரை சேகரிக்க வேண்டும். இன்றைய மழைநீர் சேகரிப்பு, எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுப்போகும் இயற்கையின் சொத்து என்ற ஒருமித்த எண்ணத்துடன் செயல்பட வேண்டும்.
 திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் விநியோகத்தில் குறைபாடுகள் இருப்பின் அதுதொடர்பாக பொதுமக்களிடமிருந்து புகார்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் மையம் திறக்கப்பட்டு, அதில் பெறப்படும் புகார்களுக்கு 24 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் த. ஆனந்த். இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை அவர் வழங்கினார். 
 கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவராஜன், ஆர். சுப்பரமணியன், வட்டாட்சியர் நக்கீரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com