புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 23rd June 2019 01:48 AM | Last Updated : 23rd June 2019 01:48 AM | அ+அ அ- |

புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவாரூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாணவர்கள் நலன் மற்றும் சமூக நீதிக்கு எதிராக உள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு ஆவணத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாவட்டத் தலைவர் இரா. தாமோதரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலர் களப்பிரன் பங்கேற்று, கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினார்.
இதில் மாவட்டச் செயலர் ஆர். பகவன்ராஜ், மாவட்ட பொருளாளர் மா. சண்முகம், அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலர் மு. செüந்தரராஜன், சிறுபான்மை நலச் சங்க மாவட்ட அமைப்பாளர் எஸ். ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.