சுடச்சுட

  

  காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்க சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 26th June 2019 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரிப் பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க, தமிழக சட்டப் பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.
  மன்னார்குடியில் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் தலைவர் க.கா.ரா. லெனின் தலைமை வகித்தார். பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம்  ஜூன் 23- ஆம் தேதி நடத்திய, மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்துக்கு ஆதரவு அளித்து, பங்குபெற்ற அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள், விவசாய சங்கங்கள், சமூக நல அமைப்புகள் உள்ளிட்டோருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
  மேலும், மனிதச்சங்கிலி போராட்டங்களில் பங்கு பெற்றவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறவேண்டும். காவிரிப் பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க சட்டப் பேரவை கூட்டத் தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  இக்கோரிகளை வலியுறுத்தி, இயக்கத்தின் தலைவர் க.கா.ரா. லெனின், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
   அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜி. ரத்தினக்குமார், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க. சண்முக சுந்தரம் ஆகியோர் தீர்மானங்களை விளக்கிப் பேசினர். 
  இக்கூட்டத்தில், அமைப்பின் துணைத் தலைவர் முகம்மது ரபீக், நிர்வாகிகள் தூத்துக்குடி அக்ரி பரமசிவன், அன்பழகன், உழவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai