சுடச்சுட

  

  கூட்டுறவு சங்கத் தேர்தல்: தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் வெற்றி

  By DIN  |   Published on : 26th June 2019 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மன்னார்குடியை அடுத்துள்ள கோட்டூர் வட்டார ஆசிரியர் சங்க சிக்கன மற்றும் நாணயக் கூட்டுறவு சங்க தேர்தலில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளிஆசிரியர் மன்றத்தின் சார்பில் போட்டியிட்ட 11 பேரும் வெற்றி பெற்றனர்.
  கோட்டூர் வட்டார ஆசிரியர் சங்க சிக்கன மற்றும் நாணயக் கூட்டுறவு சங்கத்துக்கு 11 இயக்குநர்கள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மற்றும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகியவற்றின் சார்பில் தலா 11 பேர் போட்டியிட்டனர். 
  தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் போட்டியிட்ட ஜெ. கிருத்திகாவாசன், உ.மா. சாந்தி, ரா. கண்ணன், கோ. பாலமுருகன், ந. ஜோதி, அ. மைக்கேல்ராஜ், வை. ராமச்சந்திரன், செ. அருள்பெலிக்ஸ், அ. பேபி கிறிஸ்டினாள், தெ. கிரிஜாமாலனி, த. சிவபாலன் ஆகிய 11 பேரும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
  இவர்களில் ஜெ. கிருத்திகாவாசன் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பதவிக்கு முன்னிலைப் படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற 11 பேரும், சங்கத்தின் மாநில பொதுச் செயலர் க. மீனாட்சிசுந்தரம், மாவட்டச் செயலர் பெ.ரா. ரவி ஆகியோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai