சுடச்சுட

  

  ஜார்க்கண்ட் சம்பவம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

  By DIN  |   Published on : 26th June 2019 09:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜார்க்கண்டில் முஸ்லிம் இளைஞர்  கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து,  அந்த  அமைப்பின் திருவாரூர் மாவட்டச் செயலர் ஜே. அனஸ் நபில் வெளியிட்ட அறிக்கை: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள செரைகெலா கர்சவான் என்ற இடத்தில் தப்ரேஸ் அன்சாரி (24) என்ற இளைஞரை சிலர் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். மறுநாள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அதன் பின்னர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.
  மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் மதத்தின் பெயரால் தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற தாக்குதல்கள் எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளக்கூடியவை அல்ல.  இதுபோன்ற கொடூரத் தாக்குதல்கள் இனி நடப்பதை தடுக்க மத்திய அரசு உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும். இந்தக் கொடும் தாக்குதலை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடுமையாகக் கண்டிக்கிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai