சுடச்சுட

  

  தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க விவசாயத் தொழிலாளர் கோரிக்கை

  By DIN  |   Published on : 26th June 2019 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தை வறட்சிப் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
  இதுகுறித்து, மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் அளித்துள்ள கோரிக்கை மனு:
   நூறுநாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு விடுமுறையுடன் கூடிய ஊதியத்தை வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலையைத் தொடர்ந்து வழங்குவதுடன், சட்டப்படியான தினக்கூலி ரூ. 229- ஐ முழுமையாக வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் கடும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தை வறட்சிப் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும். குக்கிராமங்கள் வரை பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.
   நீர்நிலை உள்ளிட்ட புறம்போக்கு இடங்களுக்கு மாற்று இடம் அளிக்கும் அரசாணையை காலநீட்டிப்பு செய்து, மனை வழங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் தரமான உணவுப் பொருள்களை விநியோகம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.
  இந்த மனுவை மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் 
  கேட்டுக்கொண்டனர்.
  மன்னார்குடி ஒன்றிய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் கே.டி. கந்தசாமி, ஒன்றியச் செயலர் எம். மணி தலைமையில் விவசாயத் தொழிலாளர்கள், மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்து, ஒன்றிய ஆணையர் எஸ். கலைச்செல்வத்திடம் இந்தக் கோரிக்கை மனுவை அளித்தனர்.
   இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் எஸ். ஆறுமுகம், ஒன்றியச் செயலர் எம். திருஞானம், சங்க நிர்வாகிகள் டி. பன்னீர்செல்வம், தங்கவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai