சுடச்சுட

  

  பெண் குழந்தைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: தாய்மார்களுக்கு ஆட்சியர் பரிசு

  By DIN  |   Published on : 26th June 2019 09:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
  நிகழ்ச்சியில், பெண் குழந்தைகள் பிறப்பை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடுவது, மகளும் மகனும் சமம் என கருதி வளர்ப்பது, பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது, பெண் குழந்தைகள் சுதந்திரமாக இருக்கவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பை தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கவும் ஊக்குவித்தல், கர்ப்பத்தில் பாலினம் அறிய முயலும் எந்த ஒரு சம்பவம் குறித்தும் புகார் தெரிவித்தல், குழந்தைகளுக்கான சட்டங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்து கற்பித்தல் ஆகியவை குறித்து தாய்மார்களிடம் எடுத்துக் கூறப்பட்டன. 
  நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் பங்கேற்று, பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அனைத்து பெண்களுக்கும், இரும்பு சத்து நிறைந்த இனிப்புகளும், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் குறித்த வழிகாட்டி குறிப்புகளும், பழங்கள், மற்றும் மரக்கன்றுகளையும் அவர் வழங்கினார்.  இதில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமார்,  மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா, இணை இயக்குநர் (சுகாதாரம்) உமா, துணை இயக்குநர் ஸ்டான்லி மைக்கேல் மற்றும்  மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து
  கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai