சுடச்சுட

  

  மன்னார்குடியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

  By DIN  |   Published on : 26th June 2019 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மன்னார்குடி மின் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 26) நடைபெறுகிறது.
  இதுகுறித்து, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கி. ராதிகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  மன்னார்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், திருவாரூர் மேற்பார்வை பொறியாளர், சீ. கிருஷ்ணவேணி தலைமையில் புதன்கிழமை மின் நுகர்வோர் குறைதீர்கூட்டம் நடைபெறவுள்ளது.
  இந்தக் கூட்டத்தில் மன்னார்குடி மின் கோட்டத்துக்குள்பட்ட மன்னார்குடி, வடுவூர், உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, நீடாமங்கலம், கூத்தாநல்லூர், கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர் கலந்துகொண்டு, தங்கள் பகுதி மின் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம் என அந்த செய்திக் குறிப்பில்
  கூறப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai