சுடச்சுட

    

    100 நாள் வேலைத் திட்டத்தை தொடங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 26th June 2019 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைத் திட்டத்தை தொடங்க வலியுறுத்தி, திருவாரூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். சட்டக்கூலி ரூ. 250- ஐ முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவானது, அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
    ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எம். கலைமணி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் அமிர்தலிங்கம் பங்கேற்று, கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். இதில் ஒன்றியச் செயலர் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai