மே 25, 26-இல் நடைபெறும் நெல் திருவிழாவில் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து நூல்கள் வெளியிட முடிவு

நிகழாண்டு மே 25, 26- ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள நெல் திருவிழாவில் பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் 

நிகழாண்டு மே 25, 26- ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள நெல் திருவிழாவில் பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் விதைகள் குறித்து மூன்று நூல்கள் வெளியிடுவது என்று திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
கிரியேட் நமது நெல்லைக் காப்போம் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக நெல் ஜெயராமனால் நடத்தப்பட்டு வந்த தேசிய அளவிலான நெல் திருவிழாவை தற்போது அவர் மறைந்த நிலையில், தொடர்ந்து 13 - ஆம் ஆண்டாக நடத்துவது குறித்து, இரண்டாம்கட்ட ஆலோசனைக் கூட்டம், திருத்துறைப்பூண்டி வர்த்தகர்கள் சங்கக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கிரியேட் அமைப்பின் தலைவர் பி. துரைசிங்கம் தலைமை வகித்தார். நெல் திருவிழா ஆலோசனைக் குழுத் தலைவர்  திருவாரூர் ஜி. வரதராஜன், கிரியேட் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிரியேட் கள ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கண்ணா வரவேற்புரையாற்றினார்.
தீர்மானங்கள்: நிகழாண்டு நெல் திருவிழாவை மே  25,  26- ஆம்  தேதிகளில் திருத்துறைப்பூண்டி ஏ . ஆர். வி. திருமண மண்டபத்தில் நடத்துவது; முதல்கட்டமாக நெல் திருவிழாவுக்குத் தேவையான விதை நெல் தேர்வு மற்றும் கொள்முதல் பணிகளை விதை நெல் கமிட்டி விரைந்து மேற்கொள்வது; நெல் திருவிழாவுக்கு துண்டுப் பிரசுரங்கள் தயார் செய்யவும், வெளி மாவட்ட விவசாயிகள் மற்றும் பிற மாநில விவசாய அமைப்புகள், விவசாயப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுப்பது; நிகழாண்டு நெல் திருவிழாவில் பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் விதை உற்பத்தி தொழில்நுட்பம்  தொடர்பான மூன்று நூல்களை வெளியிடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் முன்னோடி இயற்கை விவசாயிகளான தேனாம்படுகை பாஸ்கரன், பந்தநல்லூர் அசோகன், வெண்பா பண்ணை தில்லை நாதன், ஆலங்குடி பெருமாள், கதிராமங்கலம் ஸ்ரீராம், திருத்துறைப்பூண்டி அய்யப்ப சேவா சமாஜ பொருளாளர் கண்ணன், கொறுக்கை ஜானகிராமன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கிரியேட் உதவி கள ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com