ரூ. 33 கோடியில் துணைமின் நிலையம்

திருத்துறைப்பூண்டி நகருக்கு ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.33 கோடி மதிப்பீட்டில்

திருத்துறைப்பூண்டி நகருக்கு ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.33 கோடி மதிப்பீட்டில் துணைமின் நிலையம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
திருத்துறைப்பூண்டி நகர் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு பள்ளங்கோயில் துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், மின்விநியோகத்தில் அவ்வப்போது மின் அழுத்தக் குறைபாடு ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து, திருவாருர் மாவட்ட மேற்பார்வைப் பொறியாளர் சந்திரசேகரன், மன்னார்குடி கோட்ட பொறியாளர் ராதிகா ஆகியோரின் முயற்சியால், ரூ.33 கோடி மதிப்பீட்டில் திருத்துறைப்பூண்டி நகர் பகுதிக்கு 16 மெகாவாட் மின்திறன் கொண்ட புதிய துணை மின்நிலையம் நெடும்பலத்தில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி, நகரில் 9 கி.மீ. தூரம் மின்பாதையும், புதியதாக 35 மின்மாற்றிகளும் அமைக்கப்பட உள்ளன. மேலும், பிறவி மருந்தீசுவரர் கோயிலின் நான்கு வீதிகளிலும் தேரோட்டத்தின்போது ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கும் வகையில், பூமிக்கு கீழே வயர்களைக் கொண்டு செல்லும் வகையில், புதைவட மின்பாதைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் இப்பணிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் ஜான் விக்டர் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com