சுடச்சுட

  


  திருவாரூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலையொட்டி திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். 
  திருவாரூர் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த திமுக முன்னாள் தலைவர் மு. கருணாநிதி, கடந்த ஆண்டு மறைந்ததைத் தொடர்ந்து, திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், நிகழாண்டு ஜனவரி 28- ஆம் தேதி, திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. 
  அப்போது, கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்று வந்ததால், இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டன. திமுக தலைமையின் தூண்டுதல் பேரிலேயே, தேர்தலை நிறுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்பட்டது.
  அதேநேரம், அமமுக சார்பில் எஸ். காமராஜ், திமுக சார்பில் பூண்டி கே. கலைவாணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதனிடையே அனைத்துக் கட்சி உறுப்பினர்களைக் கேட்டறிந்த தேர்தல் ஆணையம், கஜா புயல் நிவாரணப் பணிகளை காரணம் காட்டி, திருவாரூர் இடைத் தேர்தலை ஒத்தி வைத்தது.  இந்நிலையில், தற்போது மக்களவைத் தேர்தலோடு சேர்த்து திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு முடிவடைந்து விட்டது. 
  ஆனால், இன்னும் எந்த கட்சியும் திருவாரூர் இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. திமுகவில் ஏற்கெனவே கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரா அல்லது  மாற்றம் இருக்குமா என்பது தெரியவில்லை. 
  இந்நிலையில், கடந்த முறை திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன், திருவாரூர் தொகுதியில் கடந்த சில நாள்களாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கொரடாச்சேரி, அம்மையப்பன், திருநெல்லிக்காவல், புதூர், மாரங்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார். மேலும் தலைமை வேட்பாளரை அறிவித்த பிறகு, பிரசாரத் திட்டங்கள் வகுத்து, பிரசாரப் பணிகள் தீவிரமடையும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai