மயிலாடுதுறை தொகுதியில்  28 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக போட்டி

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக போட்டியிடுகிறது. இதனால், அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக போட்டியிடுகிறது. இதனால், அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதியான  மயிலாடுதுறை தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியும் இத்தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்தார். 
இதில், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் திமுக போட்டியிடப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கடந்த 1951-ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 1984,1989,1991- ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் குத்தாலம் பி. கல்யாணம் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதன்பிறகு, 28 ஆண்டுகளாக திமுக சார்பில் வேட்பாளர்கள் யாரும் இந்த தொகுதியில் நேரடியாக போட்டியிடவில்லை. திமுக தலைமையிலான கூட்டணியில் 1996-ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பி.வி. ராஜேந்திரனும்,  1998-ஆம் ஆண்டு கிருஷ்ணமூர்த்தியும், 1999-ஆம் ஆண்டு  பாமக சார்பில் பு.தா. அருள்மொழியும், 2004, 2009-ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் சார்பில் மணிசங்கர் அய்யரும், 2014-ஆம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஹைதர் அலியும் போட்டியிட்டனர். இதில் 1996, 1998, 2004- ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
தற்போது, நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர், இத்தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் செ. இராமலிங்கம், குத்தாலம் பி. கல்யாணம், குத்தாலம் க. அன்பழகன், எம். பன்னீர் செல்வம், அருள்செல்வன், ஜெக. வீரபாண்டியன் உள்பட 17 பேர் கட்சி தலைமையிடம் மனு அளித்துள்ளனர்.   
1951-ஆம் ஆண்டு முதல் இதுவரை இங்கு நடைபெற்ற 16 தேர்தல்களில் காங்கிரஸ் 9 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 2 முறையும், திமுக 2 முறையும், அதிமுக 2 முறையும், கம்யூனிஸ்ட் கட்சி ஒருமுறையும் வென்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com