மக்களவைத் தேர்தல்: நாளை வேட்பு மனு தாக்கல் தொடக்கம்: திருவாரூரில் ஏற்பாடுகள் தீவிரம்

திருவாரூரில் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

திருவாரூரில் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 
17- ஆவது மக்களவைத் தேர்தலுடன், தமிழகத்தில் திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி உள்பட 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும், இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19- ஆம் தேதி தொடங்கும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. 
நாகை மக்களவைத் தொகுதியானது, திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளையும், நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளையும் உள்ளடக்கியது. நாகை மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிட, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். இதையடுத்து தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 100 மீ. தூரத்துக்கு, வெள்ளை வண்ணத்தில் அடையாளமிடப்பட்டுள்ளது. ஏனெனில், வேட்புமனு தாக்கலின்போது, வேட்பாளரோடு 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவேஅறிவித்துள்ளது. 
புதன்கிழமை பெளர்ணமி என்பதால், அன்றைய தினம் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com