அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பிரசாரம்
By DIN | Published On : 24th March 2019 01:22 AM | Last Updated : 24th March 2019 01:22 AM | அ+அ அ- |

நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை. சரவணனுக்கு ஆதரவாக திருத்துறைப்பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில், முன்னாள் அமைச்சர் கே. ஜெயபால் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், அனைத்துக் கட்சியினரும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை. சரவணனுக்கு ஆதரவாக திருத்துறைப்பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட கச்சனம், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி ரயில் நிலையம், விளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் கே. ஜெயபால் பிரசாரம் மேற்கொண்டனர்.
கட்சியின் நகரச் செயலாளர் சண்முகசுந்தர், ஒன்றியச் செயலாளர் சிங்காரவேலு, பாஜக நகரத் தலைவர் வினோத் மற்றும் தேமுதிக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி பிரமுகர்கள்
கலந்துகொண்டனர்.