Enable Javscript for better performance
கூத்தாநல்லூரில் 2 வீடுகள் தீக்கிரை- Dinamani

சுடச்சுட

    

    கூத்தாநல்லூரில் திங்கள்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன.
    லெட்சுமாங்குடி- திருவாரூர் பிரதான சாலை மேலத்தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (42). இவரும், இவரது தாயார் காளியம்மாளும் (73) அருகருகே வசித்து வருகின்றனர். இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் இவர்களது வீடுகளில் தீப்பிடித்து எரிந்தது. இதனால், தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
    கூத்தாநல்லூர் வட்டாட்சியர் ஜி. மலர்க்கொடி, வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.5 ஆயிரமும், 10 கிலோ அரிசி மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின. ஆடு ஒன்றும் உயிரிழந்தது.
    பாதிக்கப்பட்டவர்களை திருவாரூர் சட்டப் பேரவைத் தேர்தல் திமுக வேட்பாளர் பூண்டி கே. கலைவாணன், நகரச் செயலாளர் எஸ்.எம்.காதர்உசேன், அவைத் தலைவர் எஸ்.வி.பி. பக்கிரிசாமி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியின் நிறுவனர் பி.முருகையன், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, பாய், தலையணை, போர்வை உள்ளிட்ட பொருள்களை வழங்கினார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai