Enable Javscript for better performance
பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் பேரூராட்சிக்கு உள்பட்ட பழைய நீடாமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.
    இதையொட்டி, கடந்த 18-ஆம் தேதி காப்பு கட்டுதல் தொடங்கி, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. திங்கள்கிழமை பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.  
    விழாவையொட்டி, பழைய நீடாமங்கலம் சாலையில் அமைந்துள்ள அய்யனார் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இரவு கிராமிய வாத்தியங்கள் முழங்க பத்ரகாளியம்மன் வீதியுலா நடைபெற்றது. 
    செவ்வாய்க்கிழமை மஞ்சள் நீராட்டு விழா, காப்பு நீக்குதல் ஆகியன நடைபெற்றன.
    இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா ஜி.எஸ்.வி. நாராயண அய்யர், கிராமத் தலைவர் கே.பரமசிவம், செயலாளர் கே.அன்பழகன் மற்றும் இளைஞர் பொதுநலப் பேரவையினர் செய்திருந்தனர். புதன்கிழமை (மார்ச் 27) விடையாற்றி நடைபெறுகிறது.                                                             
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai