Enable Javscript for better performance
மைய நூலகத்தில் நூல் கலந்தாய்வு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மைய நூலகத்தில் வாசக சாலை அமைப்பின் சார்பில், நூல் கலந்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 
    இதில் எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய நிழலின் தனிமை நூல் குறித்த விவாதம் நடைபெற்றது. வாசகர் அபிலா, திருவிக கல்லூரி பேராசிரியர் நடராஜன் ஆகியோர் பங்கேற்று, நூல் குறித்து விளக்கிப் பேசினர். 
    இதில் எழுத்தாளர் தேவி பாரதி பேசுகையில், வாசகர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்வது எழுத்தாளருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் நிகழ்வு. எழுத்தாளர்கள் நீதி என்ன உள்ளதோ அதை பின்பற்றிதான் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர்கள் உணர்ச்சி வசப்பட்டவர்கள், அவர்களின் எண்ண ஓட்டங்கள், எழுத்து நடை என்பது இயல்பாகவே உருவாகிவிடுகிறது என்றார். 
    நிகழ்ச்சியில் நூலகர் ஆசைத்தம்பி, எழுத்தாளர் சுரேஷ் பிரதீப், வாசக சாலை நிர்வாகி நரேன் கிருஷ்ணா, வாசகர்கள் எண்கண் மணி, தமிழ்க்காவலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai