Enable Javscript for better performance
வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி- Dinamani

சுடச்சுட

    

    வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி

    By DIN  |   Published on : 27th March 2019 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மென்பொருள் மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    மக்களவை மற்றும் திருவாரூர் சட்டப் பேரவை இடைத்தேர்தலையொட்டி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்குச்சாவடி மையங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கணினி மென்பொருள் மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி, அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், திருவாரூர் சட்டப் பேரவை இடைத்தேர்தல் பொதுப் பார்வையாளர் சந்திரகாந்த் டெங்க், மாவட்டத் தேர்தல் அலுவலர் த.ஆனந்த் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
    இதன்படி, திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 274 வாக்குச் சாவடி மையங்களுக்கு 316 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 316 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 340 வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் 283 வாக்குச் சாவடி மையங்களுக்கு 326 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 326 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 351 வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும், திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 304 வாக்குச் சாவடி மையங்களுக்கு 350 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 350 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 377 வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும், நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதியில் 309 வாக்குச்சாவடி மையங்களுக்கு 356 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 356 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 384 வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 
    மேலும், திருவாரூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்காக திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 304 வாக்குச்சாவடி மையங்களுக்கு 350 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 350 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 377 வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 
    நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) உமாமகேஸ்வரி, தனி வட்டாட்சியர்(தேர்தல்) சொக்கநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai