Enable Javscript for better performance
இடிக்கப்பட்ட கொடி மேடைகளை அகற்றக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்ட  கொடி மேடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    வலங்கைமான் பேரூராட்சிக்குள்பட்ட ராமர் சன்னிதி, சேணியர் தெரு, கடைத் தெரு உள்ளிட்ட இடங்களில் கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் பல்வேறு கால கட்டங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் கல்வெட்டுடன் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட  சிறிய மற்றும் பெரிய கொடி கம்பங்கள் இருந்தன. முன்னதாக, தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்ததையடுத்து கொடிக் கம்பங்களில் இருந்த கட்சிக் கொடிகள் அப்புறப்படுதப்பட்டன. 
    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பேரூராட்சி ஊழியர்கள் இயந்திரம் கொண்டு கொடி மேடைகளை இடித்து தள்ளினர். ஆனால், அவை அப்புறப்படுத்தப்படவில்லை. இதனால், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் உடனடிய அகற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai