Enable Javscript for better performance
திருட்டு வழக்கில் 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வலங்கைமான் அருகே அண்மையில் நிகழ்ந்த திருட்டு வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். 
    வலங்கைமான் அருகே கண்டியூரில் உள்ள ஊராட்சி முன்னாள் தலைவர் வைத்தியநாதன் வீட்டில் அண்மையில் திருட்டு நிகழ்ந்தது. இதுகுறித்து, வலங்கைமான் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, மன்னார்குடி அருகேயுள்ள சித்தமல்லி மல்லிகைத்தெருவைச் சேர்ந்த கார்த்திக்(19), ஆனந்தராஜ்(17), தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள பந்தநல்லூர் செருகுடி பகுதியை சேர்ந்த ரஞ்சித் (18), அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார்(32)  ஆகிய 4 பேரை கைது செய்தனர், மேலும், அவர்களிடமிருந்து 15 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai