Enable Javscript for better performance
திருவாரூர் இடைத் தேர்தல்: 20 மனுக்கள் ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட 20 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
    திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட மார்ச் 19-ஆம் தேதி முதல் மார்ச் 26 வரை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், போட்டியிட 39 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை  புதன்கிழமை நடைபெற்றது. முடிவில் 19 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.  இதில் அதிமுகவைச் சேர்ந்த ஆர். ஜீவானந்தம், திமுகவைச் சேர்ந்த பூண்டி கே. கலைவாணன்,  அமமுகவைச் சேர்ந்த எஸ். காமராஜ், மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த கி. அருண் சிதம்பரம்,  தமிழ்நாடு இளைஞர் கட்சியைச் சேர்ந்த இரா. குணசேகரன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ர. வினோதினி மற்றும் 15 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் என 20 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai