Enable Javscript for better performance
பேரவை இடைத் தேர்தல் குறித்த புகார்: நேரில் தெரிவிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    பேரவை இடைத் தேர்தல் குறித்த புகார்: நேரில் தெரிவிக்கலாம்

    By DIN  |   Published on : 28th March 2019 06:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் குறித்த புகார்கள் நேரில் சந்தித்து தெரிவிக்கலாம் என்று திருவாரூர் சட்டப் பேரவை இடைத் தேர்தல் பொதுப் பார்வையாளர் சந்திரகாந்த் டாங்கே தெரிவித்துள்ளார். 
    இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதியின் இடைத் தேர்தலுக்கு, பொது பார்வையாளராக இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளேன். திருவாரூர் விளமலில் உள்ள அரசு புதிய ஆய்வு மாளிகை அறை எண் 3-இல் தங்கியுள்ளேன். திருவாரூர் சட்டப் பேரவை இடைத் தேர்தல் தொடர்பாக புகார்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க விரும்பினால், அலுவலக வேலை நாள்களில் காலை 9 முதல் 10 மணி வரை ஆய்வு மாளிகையில் நேரடியாக சந்தித்து தெரிவிக்கலாம். மேலும், 6382290628 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai