Enable Javscript for better performance
மீன்பிடி படகுகளை பதிவு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில் மீன்பிடி படகுகளை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார். 
    இதுகுறித்து,  அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் 13 மீனவ கிராமங்களில் 2,911 மீனவ குடும்பங்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். மொத்த மீனவ மக்கள்தொகை 11,439 ஆகும். மேலும், மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் மீன் பிடிப்புக்காக பயன்படுத்தப்படுகின்றன. 
    இதுவரையில் 175 படகுகள் மட்டுமே இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த படகுகள் இதுவரை தஞ்சாவூர் மாவட்ட மீன் துறை உதவி இயக்குநரின் கட்டுப்பாட்டில் தஞ்சாவூர் மாவட்ட பதிவு எண்ணான டிஎன்-07 என்ற குறியீட்டில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு 
    வந்தன. 
    தற்போது, திருவாரூர் மாவட்டத்திற்கென பதிவு எண் தனியே பெறப்பட்டு திருவாரூர் மாவட்ட மீன்பிடி படகுகளுக்கான பதிவு மற்றும் மீன்பிடி உரிமம் வழங்கும் பணிகள் அனைத்தும் திருவாரூர் மீன் துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது.
    எனவே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளும், மீன்வளத் துறை மூலம் புதிதாக பதிவு மற்றும் மீன்பிடி உரிமம் கட்டாயம் பெறவேண்டும். மேலும் 3 ஆண்டுக்கு ஒரு முறை மீன்பிடி உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத மற்றும் மீன்பிடி உரிமம் இல்லாதபட்சத்தில் தமிழ்நாடு மீன் பிடிப்பு ஒழுங்கு முறை சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    எனவே, இதுவரை பதிவு செய்யாமல் உள்ள படகு உரிமையாளர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக  கூடுதல் கட்டடத்தில் இயங்கும் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, விண்ணப்பத்தை பெற்று உடனடியாக படகு பதிவை மேற்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04366-224140 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai