Enable Javscript for better performance
ரூ. 1.97 லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டி பகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 1.97 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். 
    திருத்துறைப்பூண்டி அருகே தில்லைவிளாகம் மரக்காகோரையாறு பாலம் பகுதியில் செவ்வாய்கிழமை இரவு தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுதாகர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆயக்காரன்புலம் பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த பட்டுக்கோட்டை தனியார் நிதி நிறுவன மேலாளர் வினோத்குமார்  (33) சென்ற வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது, அதில், ரூ. 1.97 லட்சம் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்ததை தெரியவந்ததையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் ராஜன்பாபு, துணை வட்டாட்சியர் குருநாதன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai