விருதுகள் வழங்கும் விழா
By DIN | Published On : 07th May 2019 08:09 AM | Last Updated : 07th May 2019 08:09 AM | அ+அ அ- |

திருவாரூரில் அம்பேத்கார் மக்கள் உரிமை இயக்கம் சார்பில் விருதுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
டாக்டர் அம்பேத்கரின் 128-ஆவது பிறந்தநாளையொட்டி, இந்த விருதுகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல் அமீது தலைமை வகித்து, விருதுகளை வழங்கினார். புரட்சியாளர் அம்பேத்கர் விருது அம்பேத்கர் வாசகர் வட்ட எழுத்தாளர் ஜீவகனுக்கும், சீர்திருத்தச் சிங்கம் பெரியார் விருது திராவிடர் கழக மண்டல முன்னாள் செயலர் க. முனியாண்டிக்கும், சாதி ஒழிப்பு போராளி விருது தமிழக விவசாயிகள் சங்க இணைச் செயலர் ஜி. வரதராஜனுக்கும், தமிழ் ஒளி விருது இலக்கிய வளர்ச்சிக் கழக உறுப்பினர் எண்கண் சா. மணிக்கும், பெண்ணுரிமைப் போராளி விருது நாம் தமிழர் கட்சியின் மக்களவை வேட்பாளர் ஆர். காளியம்மாளுக்கும், பொதுவுடமைப் போராளி விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜனுக்கும் வழங்கப்பட்டன. இதில், ஒருங்கிணைப்பாளர் சி. மகேந்திரன், நிர்வாகிகள் வீ. கமல்ராஜ், ச. செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.