முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
கல்லூரி மாணவி கடத்தல்
By DIN | Published On : 15th May 2019 08:54 AM | Last Updated : 15th May 2019 08:54 AM | அ+அ அ- |

மன்னார்குடி அருகே கல்லூரி மாணவியை கடத்தி சென்றுள்ளதாக இளைஞர் மீது, பெற்றோர் திங்கள்கிழமை புகார் அளித்துள்ளனர்.
மன்னார்குடி அருகேயுள்ள வடக்கு தென்பரையைச் சேர்ந்தவர் ரமேஷ் மகள் அபிதா(18). இவர், மன்னார்குடி அரசுக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து முடித்துள்ளார். கோட்டூர் மரவாதி பகுதியைச் சேர்ந்த குழந்தைவேல் மகன் அஜெய் (21). இவர், வடக்கு தென்பரைக்கு வந்து சென்றபோது அபிதாவுடன் ஏற்பட்ட நட்பைத் தொடர்ந்து இருவரும் பழகி வந்தார்களாம். இதை, அபிதா குடும்பத்தினர் கண்டித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், மே 10-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டுக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற அபிதா அங்கு செல்லாததுடன் வீட்டுக்கும் திரும்பிவரவில்லையாம். இதையடுத்து, பெற்றோர் அபிதாவை பல இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், திருமக்கோட்டை காவல் நிலையத்தில், தனது மகளை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அஜெய் கடத்தி சென்றிருப்பதாகவும், எனவே மகளை கண்டுபிடித்து மீட்டு தருமாறு திங்கள்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.