முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 15th May 2019 08:53 AM | Last Updated : 15th May 2019 08:53 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருவாரூர் மாவட்டத் தலைவரின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்யக் கோரி அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டத் தலைவர் ஜி. பைரவநாதனை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, சில காரணங்களைக் கூறி தற்காலிக பணிநீக்கம் செய்ததோடு, திருவாரூர் தாலுக்கா காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவைகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் என். வசந்தன் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச் செயலர் எஸ். தமிழ்செல்வன், மாவட்டச் செயலர் பாண்டியன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வி.சி. குமார், மாவட்டச் செயலர் ஆர். ராஜசேகரன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.