முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, தனித்திறன் பயிற்சி
By DIN | Published On : 15th May 2019 08:48 AM | Last Updated : 15th May 2019 08:48 AM | அ+அ அ- |

மன்னார்குடியில் செயல்பட்டு வரும் ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான தன்னம்பிக்கை, தனித்திறன் பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரு நாள்கள் நடைபெற்றது.
ரெயின்போ எனும் தலைப்பில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பில் மொத்தம் 75 பேர் கலந்துகொண்டனர். 2 நாள் நிகழ்ச்சிக்கும் ஜேசிஐ மன்னை கிளைத் தலைவர் எம்.வி. வேதா முத்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். அமைப்பின் முன்னாள் மண்டலத் தலைவர் சி.டி. சிதம்பரம் பயிற்சியை தொடங்கி வைத்தார்.
இதில், தேசியப் பயிற்சியாளர் வி.எஸ். கோவிந்தராஜன், மண்டலப் பயிற்சியாளர்கள் எஸ். அன்பரசு, ராஜ்மோகன், மாமலைவாசன், பிரகாஷ், இமானுவேல், வினோத் ஆகியோர் கலந்துகொண்டு நினைவாற்றலை மேம்படுத்துதல், தன்னை அறிதல், இலக்கு நிர்ணயித்தல், நேர நிர்வாகம், தலைமைப் பண்பு, திறன்மிகு முடிவு எடுத்தல், மனித உறவுகள் ஆகிய ஏழு தலைப்புகளில் பயிற்சியளித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக, தேசியப் பள்ளித் தாளாளர் ராமநாதன், ஜேசிஐ முன்னாள் மண்டலத் தலைவர் சரவணக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு, பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர்.
இதில், அமைப்பின் முன்னாள் தலைவர்கள் எஸ். ராஜகோபாலன், ராஜகுமார், திட்டத் தலைவர் எஸ். கமலப்பன், கிளைச் செயலர் கே. வினோத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.