திரெளபதை அம்மன் கோயிலில் தீமிதி உத்ஸவம்
By DIN | Published On : 15th May 2019 08:54 AM | Last Updated : 15th May 2019 08:54 AM | அ+அ அ- |

நன்னிலம் சோத்தக்குடி திரெளபதை அம்மன் கோயிலில் 5-ஆம் ஆண்டு தீமிதி உத்ஸவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில், மே 1- இல் தர்மர் பிறப்பு உத்ஸவம், மே 2-இல் கிருஷ்ணர் பிறப்பு உத்ஸவம், மே 3-இல் அம்மன் பிறப்பு உத்ஸவம், மே 4-இல் திருக்கல்யாண உத்ஸவம், மே 5-இல் சுமத்ரா கல்யாண உத்ஸவம், மே 6-இல் துகில் உரித்தல் உத்ஸவம், மே 7-இல் அர்ஜுனன் தபசு உத்ஸவம், மே 8-இல் கீசகன் வதம் பூவெடுத்தல் நிகழ்ச்சி, மே 9-இல் கிருஷ்ணன் தூது நிகழ்ச்சி, மே 10-இல் அரவான் களபலி காளியாட்டம் உத்ஸவம், மே 11-இல் பாரத யுத்தம் ஆரம்பம் உத்ஸவம், மே 12-இல் கர்ணன் மோட்சம் உத்ஸவம், மே 13-ஆம் தேதி காலை படுகளம் உத்ஸவம் நடைபெற்றது. பின்னர், மாலை திராளன பக்தர்கள் சக்தி கரகத்துடன் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து இரவு திரெளபதை அம்மன் கோயிலில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை பட்டாபிஷேகம் உத்ஸவம் நடைபெற்றது. விழாவில், சோத்தக்குடி மற்றும் அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்த திராளன பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை நன்னிலம் சோத்தக்குடி மாதா கோயில் தெரு மக்கள் செய்திருந்தனர்.