மதுப்புட்டி விற்பனை: நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்கள் புகார்
By DIN | Published On : 15th May 2019 08:50 AM | Last Updated : 15th May 2019 08:50 AM | அ+அ அ- |

வலங்கைமான் பகுதியில் அனுமதியின்றி மதுப்புட்டிகள் விற்பனை செய்து வரும் 3 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வலங்கைமான் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பெண்கள் புகார் அளித்தனர்.
வலங்கைமான் அருகேயுள்ள அரவூர், அன்பிற்குடையான், பயத்தஞ்சேரி கிராமங்களில் 3 பேர் சட்ட விரோதமாக அனுமதியின்றி மதுப்புட்டிகள் விற்பனை செய்துவருகின்றனர். இதனால், கிராமப்புற பெண்கள், பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்டவர்களிடம் பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வலங்கைமான் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஓவியாவிடம் செவ்வாய்க்கிழமை 30 பெண்கள் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட காவல் உதவி ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.