வேளாண் அறிவியல் நிலைய பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 16th May 2019 07:31 AM | Last Updated : 16th May 2019 07:31 AM | அ+அ அ- |

தமிழ்நாடு வேளாண் அறிவியல் நிலைய பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மு. ராமசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் வழியாக இடுபொருள் விற்பனையாளர் சான்றிதழுக்கான வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு 2019-20-ஆம் கல்வியாண்டின் சேர்க்கை நடைபெறவுள்ளது. இப்படிப்பில் வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள், வேளாண் சார்ந்த தொழில் புரிவோர் மற்றும் சுயதொழில் புரிவோர் சேர்ந்து பயன்பெறலாம். கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பியவர்கள் இப்பட்டயப் படிப்பில்
சேரலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, மே 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தை 04367 - 260666, 261444 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.