சுடச்சுட

  

  வலங்கைமானில் எழுந்தருளியுள்ள பிடாரி என்கிற குளுந்தாளம்மன் கோயில் தேர்த் திருவிழா புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
  இக்கோயில் திருவிழா கடந்த 10 நாள்களாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு இரவில் அம்மன் வீதியுலா நடைபெற்று வந்தது.
  இந்நிலையில், தேர்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. குளுந்தாளம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வெள்ளாளர் தெரு, குடந்தை ரோடு, கைலாசநாதர் தெற்கு வீதி உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் வழியாக தேர் கோயிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai