இராமநாத சுவாமி கோயிலில் இன்று தேரோட்டம்
By DIN | Published On : 18th May 2019 07:09 AM | Last Updated : 18th May 2019 07:09 AM | அ+அ அ- |

கூத்தாநல்லூர் அருகேயுள்ள திருராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலில் சனிக்கிழமை (மே 18) தேரோட்டம் நடைபெறுகிறது.
திருராமேஸ்வரம் மங்களநாயகி சமேத இராமநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகாசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், திருராமேஸ்வரம் சுற்றுப்புற கிராமமக்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட திரளானோர் தேரை வடம் பிடித்து இழுக்கவுள்ளனர். தேரோட்ட ஏற்பாடுகளை, செங்கமலத்தாயார் அறக்கட்டளை மகளிர் கலைக் கல்லூரி தாளாளர் திவாகரன் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.