சரக்கு ரயில் பணி காரணமாக போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 18th May 2019 07:03 AM | Last Updated : 18th May 2019 07:03 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை சரக்கு ரயில் பெட்டி இணைப்பு பணி காரணமாக நெடுஞ்சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீடாமங்கலம், ரயில் நிலையத்தில் இருந்து அவ்வப்போது அரிசி, நெல் போன்றவை சரக்கு ரயிலில் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். இதன் காரணமாக சரக்கு ரயில் பெட்டிகள் இணைப்பு பணி, சரக்கு ரயில் பெட்டிகள் பிரித்தல் பணி நடைபெறுவது வழக்கம். இப்பணி நடைபெறும்போது ரயில்வே கேட்மூடப்படுவதும் வழக்கம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை சரக்கு ரயில் பணிக்காக நீடாமங்கலம் ரயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் நெடுஞ்சாலைப் போக்குவரத்தில் ஒரு மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது. இதில், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.