Enable Javscript for better performance
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

    By DIN  |   Published on : 20th May 2019 08:36 AM  |   அ+அ அ-   |    |  

    மன்னார்குடி அருகே உள்ள அரசூரில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கண்டித்து, விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை வயலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
     மன்னார்குடி அருகே உள்ள அரசூர், மேலாளவந்தச்சேரி, அரிச்சபுரம் உள்பட திருவாரூர், நாகை மாவட்டப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அதன்படி அரசூரில்,  ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அளவீடு செய்யப்பட்டுள்ள விவசாய நிலத்தில் இறங்கி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும், இந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    இதுகுறித்து, அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,  "கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் சோதனை நடைபெற்றபோது, இயற்கை எரிவாயு எடுப்பதற்கான சோதனை என நினைத்தோம். தற்போது ஹைட்ரோ கார்பன், டைட்கேஸ் எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான தொழில்நுட்பம் விவசாயத்துக்கு ஆபத்து என்பதால், இத்திட்டத்தை கைவிட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், எங்கள் பகுதி மக்களிடம் இத்திட்டம் குறித்து தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்' என்றனர். மேலும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் இத்திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதேபோல் மேலாளவந்தச்சேரியிலும் போராட்டம் நடைபெற்றது.

        

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp