வேளாங்கண்ணியில் புகையிலை பொருள்கள் பறிமுதல்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுதாகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் ஆகியோர் மேற்பார்வையில், வேளாங்கண்ணி சுகாதார மேற்பார்வையாளர் மோகன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ராமமூர்த்தி, சரவணராஜ், பிரபாகரன், சிக்கல்வேலன் ஆகியோர் போலீஸாருடன் இணைந்து சோதனைகளை மேற்கொண்டனர்.
வேளாங்கண்ணி ஆர்ச், முச்சந்தி, பேருந்து நிலையம் மற்றும் ஆலய சுற்றுப் பகுதிகளில் உள்ள கடைகளில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளின்போது, சுமார் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் சில கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. 
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், வட்டார மருத்துவ அலுவலர் முன்னிலையில் கொட்டி அழிக்கப்பட்டன.  இந்த ஆய்வின்போது, பொது இடங்களில் புகைபிடித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com