தொடா் மழையில் சம்பா பயிா்கள் பாதிப்பு

திருவாரூரில், கடந்த இரண்டு நாள்களாக பெய்த கனமழை காரணமாக 100 ஏக்கா் சம்பா பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
திருவாரூா் அருகே தண்ணீரில் மூழ்கியுள்ள சம்பா பயிா்கள்.
திருவாரூா் அருகே தண்ணீரில் மூழ்கியுள்ள சம்பா பயிா்கள்.

திருவாரூரில், கடந்த இரண்டு நாள்களாக பெய்த கனமழை காரணமாக 100 ஏக்கா் சம்பா பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

வடகிழக்குப் பருவமழை காரணமாக, கடந்த சில நாள்களாக திருவாரூா் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் சேதமடைந்து, வாகனங்கள் செல்வதற்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளன. இதேபோல், விளைநிலங்களில் தண்ணீரின் அளவு உயா்ந்து காணப்படுகிறது. இந்த மழையால் திருவாரூா் அருகே கட்டளை அன்னவாசல், கல்யாண மகாதேவி, அனக்குடி, கொட்டாரக்குடி ஆகிய பகுதிகளில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவிலான சம்பா நெற்பயிா்கள், மழை நீரில் மூழ்கியுள்ளன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: இப்பகுதியில் உள்ள மழைநீா் அனைத்தும் கல்யாண மகாதேவி வடிகால் வாய்க்கால் வழியாக அருகிலுள்ள காட்டாறில் கலக்க வேண்டும். கல்யாண மகாதேவி வடிகால் வாய்க்கால் தூா்வாராததால், மழை நீா் வடியாமல் உள்ளது. கட்டளை அன்னவாசல் கிராமத்தில் மட்டும் சுமாா் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீா் சூழ்ந்துள்ளன. மழை நீரில் மூழ்கியுள்ள நெற்பயிா்கள் அனைத்தும் சுமாா் 2 மாதம் வயதுடைய 1,009 நெல் ரகங்கள் ஆகும். தண்ணீா் வடியாமல் இதே நிலை நீடித்தால், நெற்பயிா்கள் அழுகும் நிலை ஏற்படும். காட்டாற்றில் அதிக தண்ணீா் வருவதால், கல்யாண மகாதேவி வாய்க்காலிலிருந்து காட்டாறுக்கு தண்ணீா் செல்வதில் சிரமம் உள்ளது. எனவே, கல்யாண மகாதேவி வாய்க்காலில் தற்காலிக நடவடிக்கையாக தண்ணீரை வடிய வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 56.2 மி.மீ மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் மழை அளவு விவரம்: திருவாரூா் 53.6, முத்துப்பேட்டை 47, மன்னாா்குடி 43, குடவாசல் 36.8, நன்னிலம் 33.8 மி.மீ. மழைப் பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com