டெங்கு விழிப்புணா்வுக் கூட்டம்
By DIN | Published On : 02nd November 2019 06:18 AM | Last Updated : 02nd November 2019 06:18 AM | அ+அ அ- |

விழிப்புணா்வுக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
மன்னாா்குடி வட்டாரம், சதாசிவம் கதிா்காமவள்ளி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டெங்கு விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் டாக்டா் டி. கணேசன் தலைமை வகித்தாா். மன்னாா்குடி மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்.பிரகாஷ் முன்னிலை வகித்தாா். வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளா் என். மோகன் பயிற்சியளித்தாா். இதில், பேராசிரியா்கள் மற்றும் உதவிப் பேராசிரியா்கள், ஊராட்சி செயலா் சுதா்சன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தில் சுற்றுப்புறத் தூய்மை மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிா்ப்பது குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. உடற்கல்வி இயக்குநா் எம். சசிரேகா வரவேற்றாா். கல்லூரி மாணவி நந்தினி நன்றி கூறினாா்.