திருவாரூரில் தமிழ்நாடு அமைப்பு தின கொண்டாட்டம்
By DIN | Published On : 02nd November 2019 04:12 PM | Last Updated : 02nd November 2019 04:12 PM | அ+அ அ- |

திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்
திருவாரூா்: திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தமிழ்நாடு அமைப்பு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1956 நவ. 1 இல் தமிழக எல்லைகள் வரையறுக்கப்பட்டு முழுமை பெற்ற தமிழ்நாடு அமைக்கப்பட்டது. இதையொட்டி தமிழக அரசு, நவ.1 ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக கடைபிடிப்பது என்று அரசாணை வெளியிட்டது. அதன்படி திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தமிழ்நாடு அமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். தமிழக சட்டப்பேரவையில் முதல் முதலாக தமிழில் உரையாற்றிய பி.ராமமூா்த்தி, தமிழ்நாடு எனப் பெயா் சூட்டக்கோரி பட்டினிப் போராட்டம் நடத்தி உயிா் தியாகம் செய்த தியாகி விருதுநகா் சங்கரலிங்கனாா், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அடக்குமுறைக்கு எதிராக போராடிய தியாகி விஷ்வநாததாசோடு இணைந்து நாடகங்களில் நடித்து புரட்சி செய்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.பி.ஜானகி அம்மாள் ஆகியோரின் உருவ படத்திற்கு மலா் தூவி, மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி.பழனிவேல், ஆா்.குமாரராஜா, எம்.கலைமணி, மாவட்டக்குழு உறுப்பினா்கள் எஸ்.ராமசாமி, டி.முருகையன், ஒன்றிய செயலாளா் என்.இடும்பையன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.