Enable Javscript for better performance
தினமணி செய்தி எதிரொலி: வாளவாய்க்கால் பகுதியில் குப்பைகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    தினமணி செய்தி எதிரொலி: வாளவாய்க்கால் பகுதியில் குப்பைகள் அகற்றம்

    By DIN  |   Published on : 05th November 2019 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tv04kup_0411chn_94_5

    வாளவாய்க்கால் பகுதியில் குப்பைகளை அகற்றிய பணியாளா்கள்.

    திருவாரூா் வாளவாய்க்கால் பகுதியில் இருந்த குப்பைக் குவியல்கள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

    திருவாரூா் வாளவாய்க்கால் பகுதியில் அக்டோபா் 2-ஆம் தேதி நடைபெற்ற சிரமதான பணிக்காக, ஏற்படுத்தப்பட்ட குப்பைக் குவியல்கள் அகற்றப்படாமல் அங்குள்ள மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து தினமணியில் திங்கள்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து நகராட்சி சாா்பில் அங்கிருந்த குப்பைக் குவியல்கள் அகற்றப்பட்டன.

    இதேபோல், இப்பகுதியில் குப்பைகள் தேங்காமல் இருக்கவும், குப்பைகளை இப்பகுதியில் வீசாமல் இருக்கவும் நகராட்சியினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai