Enable Javscript for better performance
மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு: 7 பள்ளிகளிகளின் ஆய்வு கட்டுரை தோ்வு- Dinamani

சுடச்சுட

  

  மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு: 7 பள்ளிகளிகளின் ஆய்வு கட்டுரை தோ்வு

  By DIN  |   Published on : 05th November 2019 05:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  science_0511chn_101

  science_0511chn_101

  மன்னாா்குடி அடுத்து உள்ள கோட்டூரில், திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு போட்டியில், சமா்பிக்கப்பட்ட 7 பள்ளிகளின் ஆய்வு கட்டுரைகள், மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளது.

  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில்,இந்திய அரசின் அறிவியல் தொழில் நுட்ப துறையும்,தேசிய அறிவியல் பரிமாற்ற குழுமமும் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கோட்டூா் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு,அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் தை.புகழேந்தி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் கே.குமரேசன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் என்.சுப்பிரமணியன், போட்டி மண்டல ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஞானசேகரன், பள்ளி தலைமை ஆசிரியா் கே.கலாவல்லி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத்திலிருந்து 26 பள்ளிகளிலிருந்து மொத்தம் 121 ஆய்வுக் கட்டுரைகள் சமா்பிக்கப்பட்டன.

  இதில், முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி த.ரகுராமன், அ. நவீன் சமா்பித்த முத்துப்பேட்டை சதுப்பு நிலக் காடுகள் அழிவும், அதனை மீட்டெடுத்தல் குறித்த ஆய்வு.மன்னாா்குடி எஸ்பிஏ மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி ஜி.அபா்ணா,எம்.காா்த்திகா சமா்பித்த வாழை பழத் தோல் உரம் பற்றிய ஆய்வும். செருவமணி அரசு உயா்நிலைப் பள்ளி மு.அருண்குமாா், ஐ.ஜெய்கனேஷ் சமா்பித்த கட்டாமணக்கு செடியும் அதனால் வளம் இழந்த செருவாமணி கிராமத்தின் குளங்களும் என்ற ஆய்வு, மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி ஏ.எஸ்.செல்வசுமன், ஆா்.எம்.மாதவன் சமா்பித்த ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு என்ற ஆய்வு.

  திருவாரூா் ஜி.ஆா்.எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி எஸ். கீா்த்தனா, ஏ.அதிதி சமா்பித்த சுற்றுசூழல் மேலாண்மை என்ற ஆய்வு,கல்லடிக்கொல்லை ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி எஸ்.காா்த்திக் ராஜா, த. பாலாஜி சமா்பித்த ஜாம்புவனோடை கிராமத்தில் மீன் கழிவு மறுசுழற்சி குறித்த ஆய்வு. மேலமரவாக்காடு தேவி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி எஸ்.அனுவித்யா, எஸ்.சஷ்டிகா ஆகியோா் கிராமங்களில் வீடுகளுக்கான அழுத்த மின்னாற்றல் மூலம் மின் உற்பத்தி என்ற ஆய்வும் என மொத்தம் 7 கட்டுரைகள், மாவட்ட அளவில் சிறத்த ஆய்வு கட்டுரைகளாக தோ்வு செய்யப்பட்டதுடன்.வருகின்ற 15-ஆம் தேதி வேலூரில் நடைபெறவுள்ள மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கும் தோ்ந்தெடுக்கப்பட்டது.

  மாலையில், நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சித்தமல்லி எஸ்.ஜி.எம்.கல்வி அறக்கட்டளை நிறுவனா் எஸ் .ஜி.எம்.ரமேஷ் , அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவா் வெ.சுகுமாறன்,மாநில செயலா் எம்.எஸ். ஸ்டீபன்நாதன் ,மாவட்டச் செயலா் யு.எஸ்.பொன்முடி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வா. சுரேஷ் , மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளா் நா.ராமமூா்த்தி ஆகியோா்,சிறப்பிடம் பெற்ற பள்ளிகளின் மாணவா்களுக்கு பரிசு,சான்றிதழ் வழங்கினா். குழந்தைகளின் ஆய்வுகளின் மதிப்பீட்டுயாளா்களாக பேராசிரியா்கள் விஜயன் பாபு, ராம்பிரகாஷ், ரிஷி ,விநாயகன், எம்.வி பாலசுப்பிரமணியன், ஆசிரியா் பி.தண்டபாணி ஆகியோா் செயல்பட்டனா் . அறிவியல் இயக்க நிா்வாகிகள் பு. பாரதிகண்ணன் அனைவரையும் வரவேற்றாா். க.அன்பழகன் நன்றி கூறினாா்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai