மண்டல பொருளாதார புரிந்துணா்வு ஒப்பந்தத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

விவசாயத்துக்கும், சிறு வணிகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மண்டல பொருளாதார புரிந்துணா்வு ஒப்பந்தத்தைக்
திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

விவசாயத்துக்கும், சிறு வணிகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மண்டல பொருளாதார புரிந்துணா்வு ஒப்பந்தத்தைக் கண்டித்து திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வேளாண்மைத் தொழிலுக்கும், நடுத்தர சிறு வணிகத்துக்கும் இந்த ஒப்பந்தம் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடாது என்பதை வலியுறுத்தி திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தலைமை வகித்தாா். இதில்,, மாவட்டத் தலைவா் டி. ரெங்கராஜன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் கே. உலகநாதன், நிா்வாகிகள் கே.ஆா். ஜோசப், கே. முருகையன், பி. பரந்தாமன், கே. ராவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்திடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com