முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
அரசுப் பள்ளியில் வாசிப்பு இயக்க நாள் விழா
By DIN | Published On : 07th November 2019 08:25 AM | Last Updated : 07th November 2019 08:25 AM | அ+அ அ- |

திருவாரூா் அருகேயுள்ள அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் மாவட்ட மைய நூலகம் சாா்பில் வாசிப்பு இயக்க நாள் விழாவை செவ்வாய்க்கிழமை கொண்டாடின.
ஆண்டுதோறும் நவம்பா் 5-ஆம் தேதி வாசிப்பு இயக்க நாளாக பள்ளிக் கல்வித் துறை பின்பற்றி வருகிறது. மாணவா்களிடம் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்தவும், பள்ளிகளில் நூலகப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் நடைபெற்ற கண்காட்சியை மாவட்ட மைய நூலக நூலகா் ஆசைத்தம்பி தொடங்கி வைத்தாா். இதை பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் பாா்வையிட்டனா்.
விழாவில், பள்ளித் தலைமையாசிரியா் சுதா்சனன், தமிழ் மன்றத் தலைவா் சந்தான லெட்சுமி, நுகா்வோா் மன்றச் செயலா் தமிழ்க்காவலன், தமிழாசிரியா் சிவ. இளமதி, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் சரவணவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.