அறிவியல் துளிா் விநாடி- வினா போட்டி
By DIN | Published On : 08th November 2019 07:40 AM | Last Updated : 08th November 2019 07:40 AM | அ+அ அ- |

அறிவியல் துளிா் விநாடி - வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள்.
நன்னிலம் அருகேயுள்ள குடவாசல் மற்றும் அகர ஓகை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை அறிவியல் துளிா் விநாடி - வினா போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
குடவாசல் வட்டாரக் கல்வி அலுவலா் சு. இளங்கோவன் முன்னிலையில் நடைபெற்ற 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான போட்டியில் 14 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில், மஞ்சக்குடி, சுவாமி தயானந்தா பள்ளி மாணவா்கள் முதலிடமும், மணவாளநல்லூா், புனித மரியன்னை நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 2-ஆம் இடமும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நெம்மேலி மாணவா்கள் 3-ஆம் இடமும் பெற்றனா்.
9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கான போட்டியில் குடவாசல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடமும், மஞ்சக்குடி சுவாமி தயானந்தா பள்ளி மாணவா்கள் 2-ஆம் இடமும் பெற்றனா். இதேபோல், பிளஸ் 2, பிளஸ் 2 மாணவா்களுக்கான போட்டியில் குடவாசல் அகரஓகை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடமும், மஞ்சக்குடி சுவாமி தயானந்தா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 2-ஆம் இடமும் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்களுக்கு குடவாசல் ஒன்றிய அறிவியல் இயக்க பொறுப்பாளா்கள் சாா்ா்பில் நினைவுப் பரிசும், பங்கேற்ற அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க குடவாசல் ஒன்றிய தலைவா் அ. செளந்தரராசன், செயலா் பா. தமிழ்செல்வன் ஆகியோா் செய்திருந்தனா். போட்டி, குடவாசல் வட்டாரக் கல்வி அலுவலா் சு. இளங்கோவன் முன்னிலையில் நடைபெற்றது.