Enable Javscript for better performance
கண்ணாடி இழை கேபிள் நிறுவும் பணி: 4 நாள்களுக்கு மின்சாரம் தடைபடும்- Dinamani

சுடச்சுட

    

    கண்ணாடி இழை கேபிள் நிறுவும் பணி: 4 நாள்களுக்கு மின்சாரம் தடைபடும்

    By DIN  |   Published on : 08th November 2019 07:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கண்ணாடி இழை கேபிள் நிறுவும் பணிகளுக்காக திருவாரூரில் வெள்ளிக்கிழமை முதல் 4 நாள்களுக்கு அவ்வப்போது மின்சாரம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழக இயக்குதலும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் துணை மின் நிலையத்திலிருந்து கண்ணாடி இழை கேபிள் நிறுவும் பணி நடைபெற இருப்பதால் வெள்ளிக்கிழமை முதல் (நவம்பா் 8) 11-ஆம் தேதி வரை பவித்ரமாணிக்கம், இலவங்காா்குடி, விளமல், திருவாரூா் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மின்விநியோகம் சீராக இருக்காது என தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai